திருச்சூர் நகரின் மையப்பகுதியான சிம்னி அணைக்கு அருகில், பிரபல எடிட்டர் சைஜு ஸ்ரீதரன் இயக்குநராக அறிமுகமாகும் ஒரு புதிரான புதிய படமான “ஃபுட்டேஜ்’ படத்தினை புகழ் பெற்ற நடிகை மஞ்சு வாரியர், ஸ்விட்ச்-ஆன் செய்து துவக்கி வைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, முதல் ஷாட்டுடன் மிக இனிமையான நிகழ்வாக துவங்கியது.
“அஞ்சம் பாதிரா”, “கும்பளங்கி நைட்ஸ்,” மற்றும் “மஹேஷின்டே பிரதிகாரம்” போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களின் எடிட்டிங்கில் மூளையாக செயல்பட்டவர் சைஜு ஸ்ரீதரன். மிகப்பிரபலமான எடிட்டர் எனும் நிலையிலிருந்து, தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

இந்தியத் திரையுலகின் மிகப்பிரபலமான ஆளுமையாக விளங்கும் நடிகை மஞ்சு வாரியர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார் இவருடன் விசாக் நாயர் மற்றும் காயத்ரி அசோக் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடிக்கின்றனர். மூவி பக்கெட், காஸ்ட் அண்ட் கோ மற்றும் பேல் ப்ளூ டாட் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில், பினீஷ் சந்திரன் மற்றும் சைஜு ஸ்ரீதரன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். ராகுல் ராஜீவ் மற்றும் சூரஜ் மேனன் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். அனீஷ் C சலீம் லைன் புரொடியூசராக பணியாற்றுகிறார்.

ஷப்னா முஹம்மது மற்றும் சைஜு ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து, கூட்டு முயற்சியாக “ஃபுட்டேஜ்” படத்திற்கான திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியுள்ளனர். ஒளிப்பதிவாளராக ஷினோஸ் பணியாற்ற, கலை இயக்குநராக அப்புண்ணி சாஜன் பணியாற்றுகின்றனர். மைண்ட்ஸ்டின் ஸ்டுடியோஸ் VFX பணிகளை கவனிக்க, சமீரா சனீஷால் உடை வடிவமைப்பு பணிகளையும், ஒலி வடிவமைப்பை நிக்சன் ஜார்ஜ் அவர்களும் செய்கின்றனர்.
இந்த திரைப்படம் ஃபவுண்ட் புட்டேஜை பயன்படுத்தி எடுக்கப்படுகிறது. திரைக்கதை மற்றும் இயக்கத்தில் இந்த முயற்சியானது, திரைப்படத்துறையில் ஒரு தனித்துவமான மைல்கல்லாக இருக்கும். இந்த திட்டத்தினை சந்தீப் நாராயண் வடிவமைக்கிறார். அஸ்வெகீப்சர்ச்சிங் பாடல்களை வழங்க, சுஷின் ஷியாம் பின்னணி இசையை வடிவமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தின் அறிமுகமே ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்ததை அடுத்து, படம் தயாரிப்பில் இறங்கியுள்ள நிலையில், படத்தில் இன்னும் என்னென்ன ஆச்சர்யங்கள் இருக்குமோ என திரை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க துவங்கிவிட்டனர். மஞ்சு வாரியரின் திரை ஆளுமை, சைஜு ஸ்ரீதரன் அறிமுக இயக்கம் என இப்படம் கண்டிப்பாக ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்
- அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி.., பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி நடத்த வேண்டும் என தமிழக பள்ளக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு […]
- நரிக்குறவர்கள் சாதிச் சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!நரிக்குறவர்கள் எஸ்.டி சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் […]
- மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கக் கூடாது..,மாற்றுத்திறனாளிகள் ஆணையர் கடிதம்..!பல்வேறு அலுவல் காரணமாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் நடந்து […]
- பராமரிப்பு பணிகளுக்காக இன்று ஒருநாள் மூடப்படும் ஈஷா யோகா மையம்..!ஆண்டுதோறும் மே 30ஆம் தேதியன்று நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் ஈஷா யோகா மையம் மூடப்படுவதாக […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 177: பரந்து படு கூர் எரி கானம் நைப்பமரம் தீயுற்ற மகிழ் தலைஅம் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒளிந்திருக்கும் திறமை..!! ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று அணுக்கரு ஆய்வின் ராணி சியான்-ஷீங் வு பிறந்த தினம்யுரேனியம் அணுவிலிருந்து ஐசோடோப்புகளை வாயுப்பரவல் முறையில் பிரித்தெடுத்த அணுக்கரு ஆய்வின் ராணி, நோபல் பரிசு பெற்ற […]
- டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பு..!டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பில் சேர ஜூன் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் […]
- குறள் 444தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.பொருள் (மு.வ): தம்மைவிட (அறிவு முதலியவற்றால்) பெரியவர் தமக்குச் […]
- இன்று செவ்வாய் கிரகத்தை முதன் முதலாக சுற்றி வந்த மாரினர்-9 விண்ணில் ஏவப்பட்ட தினம்பூமியை தவிர மற்றொரு கோளைச் சுற்றி வந்த செவ்வாயின் முதலாவது முதல் விண்கலம் மாரினர்-9 விண்ணில் […]
- இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் -தமிழ் மகன் உசேன் பேச்சுதமிழக அரசை கண்டித்து நாகர்கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் அதிமுக […]
- லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை பாயும்..,மின்சார வாரியம் எச்சரிக்கை..!மின்சார வாரியத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை பாயும் என […]
- திருமண நாளில் ஏற்பட்ட பரிதாபம் தண்ணீரில் மூழ்கிய சிறுவர்களை காப்பாற்றிய நபர் நீரில் மூழ்கி பலிமதுரை மாவட்டம் ராஜாகங்கூர் பகுதியில் சேர்ந்தவர் முத்துக்குமார் இவருக்கு வயது 37 திருமணமாகி ஐந்து மற்றும் […]
- மதுரை அருகே பள்ளி வளாகத்தில் 4 வயது புள்ளிமான் மீ்ட்புமதுரை அவனியாபுரம் பொட்டக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே 4 வயது புள்ளிமான் சிக்கியது அருகில் இருந்தவர்கள் […]