• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மஞ்சமலை அய்யனார் ஆலய விழா..,

ByKalamegam Viswanathan

May 27, 2025

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்த பெற்ற கோவில்களில் ஒன்றானது,
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே வலையபட்டி ஜமீன் கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ மஞ்சமலை அய்யனார், ஈரடி கருப்புசாமி திருக்கோவில் ஆகும். இக்கோவிலில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு குதிரை எடுப்பு உற்சவ திருவிழா வெகு சிறப்பாக நடந்தது.

அரசம்பட்டி மந்தை திடலில்இருந்து, ஸ்ரீ மஞ்சமலை அய்யனார், ஈரடி கருப்புசாமி உள்ளிட்ட பல்வேறு பரிவார தெய்வங்கள் குதிரைகள் உள்ளிட்ட வர்ணசிலைகள்
எடுத்து வரப்பட்டது. பின்னர் சுவாமிக்கு கண் திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள், தீபாராதனைகள் நடந்தது.

இந்த திருவிழாவில், சுற்று வட்டார கிராமங்கள் மட்டுமின்றி,வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் தங்களது நேர்த்திக் கடன்கள் நிறைவேறியதை
யொட்டி, குதிரைகள், காளைகள், மட்டும் சுவாமி சிலைகள், குழந்தை ,பொம்மை ,சிலைகள், பைரவர், வீடு,, ஆட்டோ ,உள்ளிட்ட பல்வேறு வகையான சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகளை கிராம பொதுமக்கள் எடுத்து வந்தனர்.

மேளதாளம் முழங்க அதிர்வேட்டு, வாண வேடிக்கையுடன் இந்த சிலைகள் அனைத்தும் இருப்பிடத்திலிருந்து எடுத்து செல்லப்பட்டு சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மஞ்சமலைக்கு கால்நடையாக சென்று சிறப்பு பூஜை செய்யபட்டு வைக்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை, அரண்மனை ஜமீன்தார்கள், வலையபட்டி, அரசம்பட்டி, சல்லிக்கோடாங்கிபட்டி, புதூர், லக்கம்பட்டி, ஆகிய கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். பாலமேடு போலீசார்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.