மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கரட்டுப்பட்டி பெரியார்கால்வாய் அருகே ஒருவர் கஞ்சா வைத்திருப்பதாக சோழவந்தான் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு சந்தேக படும்படி நின்று கொண்டிருந்த நபரை போலீசார் சுற்றி வளைத்து அவரை விசாரணை செய்தனர்.
இதில் பிடிபட்டவர் திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் சரவணன் வயது 46 என்பதும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 11 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து சரவணனை கைது செய்தனர்.