• Tue. Mar 17th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

ஒரிசாவில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தியவர் கோவையில் கைது..,

ByS.Ariyanayagam

Mar 17, 2026

ஒரிஸ்ஸா மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தியவர் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம் போத்தனூர் ரயில் நிலையத்தில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒருவரை சோதனை செய்தனர்.
அவரிடம் இருந்த பைகளில் சுமார் 4 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஒரிசாவைச் சேர்ந்த ஹேமண்ட் அர்ஜில்(27) பிடித்து விசாரித்தனர். இவர் ஒரிஸ்ஸா மாநிலத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.