• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்தவர் கைது..

ByS.Ariyanayagam

Apr 8, 2026

திண்டுக்கல்லில் பங்குதாரர்கள் பெயரில் போலி ஆவணம் தயாரித்து ரூ.11.1/4 கோடி மோசடி செய்த முதியவர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்லை சேர்ந்த பத்மநாபன் மகள் சுபாஷினி(54) இவர் திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் நிர்வாக பங்குதாரராக உள்ளார். வணிக வளாகத்தின் மேலாண்மை பணிகளை மேற்கொள்வதற்காக கரூர், வாங்கலை சேர்ந்த கதிர்வேல்(70), திண்டுக்கல், வாழைக்காய்பட்டியை சேர்ந்த பத்மா, சுதாராணி, ஜெயந்தி ஆகியோரை வேலைக்கு வைத்தார்.

இந்நிலையில் வணிக வளாகத்தின் வரவு செலவுகளில் முறைகேடும், பங்குதாரர்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அந்த போலி ஆவணங்கள் மூலம் வணிக வளாகத்தில் உள்ள கடைகளை வாடகைக்கு விடுவது,விற்பனை செய்வது போன்று ரூ.11,35,16,978 மோசடி செய்தது சுபாஷினிக்கு தெரிய வந்தது இது குறித்து கதிர்வேல், பத்மா, சுதாராணி, ஜெயந்தி ஆகியோரிடம் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சுபாஷினி மாவட்ட எஸ்பி.பிரதீப் அவர்களிடம் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு DSP. குமரேசன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு கதிர்வேலை கைது செய்தனர் மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.