மலையப்பன் திரைப்படம் பூஜையுடன் படப்பிடிப்பு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை நகரில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு இன்று இனிதே படப்பிடிப்பு தொடங்கியது.

ஹீரோ குருச்சந்திரன் நடித்த முதல் பாடல்காட்சி படமாக்கப்பட்டு முதல் பாடல்காட்சியிலேயே சிறப்பாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து கைத்தட்டல்களையும் பாராட்டுக்களையும் பெற்றார் ஹீரோ குருச்சந்திரன்.
சுவாமிநாதன் இராஜேஷ் இசையமைக்க, மூதுரை பொய்யாமொழி இணை இயக்கம் செய்ய, மாஸ்டர் இராம்தாஸ் முருகன் நடனம் அமைக்க சிறப்பாக பாடல் காட்சி ஒளிப்பதிவு செய்யப்பட்டது.
விழாவில் எழுமலை திருவள்ளுவர் கல்லூரி உரிமையாளர் பெருமாள், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜி.ஆர்.பாண்டியன், ஊரின் முக்கிய பிரபல தொழிலதிபர், ஊர் பொதுமக்கள் மற்றும் படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் , இணைத் தயாரிப்பாளர்கள் திருப்பூர் செ. செல்வம், கணேஷ் ஸ்டுடியோ கோபி, சா. சுப்பையா, குஜராத் முருகன் ஆகியோர் வந்திருந்து விழாவினை சிறப்பித்தனர்.

படப்பிடிப்பு தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் இதுவரை கேமராவின் கால்கள் படாத பல்வேறு கிராமங்களில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும்.
இந்த மலையப்பன் திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் திருப்பாச்சி பட இயக்குர் பேரரசு, திருடா திருடி பட இயக்குநர் சுப்ரமணிய சிவா,
சிட்டிசன் பட இயக்குநர் ஷரவண சுப்பையா ஆகியோர் நடிப்பது குறிப்பிடத்தக்கது.