• Sun. Mar 15th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மாஸ் ஹீரோவுடன் ஜோடிசேரும் மாளவிகா?

தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களுக்கு பரீட்சயமான நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். இவர் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார்! சினிமா உலகில் பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனின் மகள் தான் நடிகை மாளவிகா மோகன்.

நடிகை மாளவிகா மோகன் இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படம் மூலம் பிரபலமானார். இந்த படத்தில் சசி குமாரின் மனைவியாக நடித்திருந்தார்.

பேட்ட படத்திற்கு பின், விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்திருந்த இத்திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. மாஸ்டர் திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

மாளவிகா மோகனன் தற்போது கார்த்திக் நரேன் இயக்கி உள்ள மாறன் படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனன் பான் இந்திய ஹீரோவான பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களில் நடித்துள்ள பிரபாஸ், சலார் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, அவர் நடிக்கும் படத்தை மாருதி இயக்க இருக்கிறார். இந்தப் படத்தை ஆர் ஆர் ஆர் படத்தைத் தயாரித்த டிவிவி தனய்யா தயாரிக்கிறார். இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.