• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

காதலுக்காக இளவரசி பட்டத்தை துறக்கும் மகோவின் பிறந்தநாள் கொண்டாட்டம்…

Byமதி

Oct 24, 2021

ஜப்பான் மன்னர் நருகிடோவின் இளைய சகோதரர் புமிகிடோவின் மகளும், அந்த நாட்டின் இளவரசியுமான மகோ, கல்லூரியில் தன்னுடன் படித்த கீ கோமுரோ என்னும் சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து விரைவில் கரம்பிடிக்க இருக்கிறார். இந்த காதலுக்காக தனது அரச பட்டத்தையும் துறந்துள்ளர் ஜப்பான் இளவரசி மகோ, எனவே இளவரசியாக தன்னுடைய கடைசி பிறந்தநாளை கொண்டாடினார்.

அரச வழக்கப்படி, இளவரசி சாதாரண குடும்பத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்டால் அவர் தனது அரச பட்டத்தை துறக்க வேண்டும். அரச குடும்பத்தில் இருந்து வெளியேறும் பெண்களுக்கு இழப்பீடாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.9 கோடியே 63 லட்சம் தரப்படும். ஆனால் இவை அனைத்தையும் நிராகரித்தார் மகோ.

2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நவம்பரில் தங்களின் திருமணம் நடைபெறும் என மகோ-கீ கோமுரோ ஜோடி அறிவித்த நிலையில், சில பிரச்சினையால் இந்த திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. எனவே, தனது சட்டப்படிப்பை தொடர்வதற்காக அமெரிக்கா சென்றுவிட்டார்.

இந்த நிலையில் மகோ-கீ கோமுரோவின் திருமணம் வருகிற 26-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் நேற்று மகோ தன்னுடைய 30 வது பிறந்தநாளை இளவரசியாக கொண்டாடினார்.
இதுவே இளவரசியாக அவர் கொண்டாடிய கடைசி பிறந்தநாள்.