• Mon. Apr 21st, 2025

மக்காச்சோளம் சேதம்.., விவசாயிகள் வேதனை…

ByK Kaliraj

Mar 20, 2025

சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளம் மழையால் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள சின்ன கமான்பட்டி, பாறைப்பட்டி, கோணம்பட்டி, அனுப்பங்குளம் , மாரனேரி சிங்கம்பட்டி, ஊரம்பட்டி, காக்கி வாடான் பட்டி, சித்துராஜபுரம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் சுமார் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூபாய் 2,300 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அறுவடை பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளம் பத்திரமாக வைத்திருக்க கொள்முதல் நிலையங்கள் ஏதும் கிடையாது.

மேலும் கிராமங்களில் நெல் களமும் இல்லாததால் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்தை விவசாய நிலங்களில் வைத்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.இந் நிலையில் கடந்த மூன்று தினங்களாக சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் நடை பெற்று வருகிறது .இதனால் மழையில் சேதமடையாமல் இருக்க மக்காச்சோளத்தை பத்திரமாக வைக்க இடம் இல்லாததால் விவசாயிகள் நிலத்தில் வைத்திருந்த மக்காச்சோளம் மழைக்கு முழுவதும் சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர். விவசாயிகளுக்கான உரிய நஷ்ட ஈடு அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.