• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மைத்ரேயன் நீக்கம்… இபிஎஸ் அறிவிப்பு

ByA.Tamilselvan

Oct 9, 2022

அதிமுகவிலிருந்து மைத்ரேயன் நீக்கப்படுவதாக இபிஎஸ் அறிவித்துள்ளார். ஓபிஎஸ்,இபிஎஸ் இடையே ஏற்பட்ட பிரிவுக்கு பிறகு அதிமுக இரு அணிகளாக செயல்படுகின்றன. அதிமுக நிர்வாகிகள் பலர் இரு அணிகளுக்கும் மாறி மாறி தாவுகின்றனர். இந் நிலையில் அதிமுகவிலிருந்து மைத்ரேயன் நீக்கப்படுவதாக இபிஎஸ் அறிவித்துள்ளார். கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் ,கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் அவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஓபிஎஸ்சை சந்தித்து மைத்ரேயன் தனது ஆதரவை தெரிவித்தநிலையில் இபிஎஸ் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இப்படி தங்களுக்கு எதிராக திரும்புபவர்களை இபிஎஸ்.ஒபிஎஸ் மாறிமாறி நீக்கம் செய்து வருவது வாடிக்கை ஆகிவிட்டது.