• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பிக்பாஸ் வீட்டை கலகலப்பாக்கிய புதிய போட்டியாளர் மைனாநந்தினி

ByA.Tamilselvan

Oct 17, 2022

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த புதிய போட்டியாளர் மைனா நந்தினி வீட்டிற்குள் சென்றவுடன் கலகலப்பாக அனைவரிடமும் பேசி அனைவரிடமும் பழக துவங்கிவிட்டார்.
விஜய்டிவியில் பிக்பாஸ் 6 வது சீசன் கடந்த 9ம் தேதி துவங்கியது. 5சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் இந்தசீசனையும் தொகுத்து வழங்குகிறார்.
இலங்கை பெண் ஜனனி உட்பட 20க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் உள்ளனர். இதில் ஜி.பி.முத்து பலரின் கவனத்தை கவர்ந்து வருகிறார்.படு மாஸாக பிக்பாஸ் 6வது சீசன் ஓடிக் கொண்டிருக்கிறது. 20 போட்டியாளர்களில் ஜெயிக்கப்போவது யார் என்பது தெரியவில்லை. இப்போது புதிய போட்டியாளராக மைனா நந்தினி வீட்டிக்குள் நுழைந்துள்ளார்.

அடுத்தடுத்தும் சில பிரபலங்கள் வீட்டிற்குள் நுழைய இருப்பதாக கூறப்படுகிறது.தற்போது இன்றைய தினத்திற்கான முதல் புரொமோ வந்துள்ளது. அதில் இந்த வாரம் எலிமினேஷ்னுக்கான நாமினேஷன் நடந்துள்ளது. அதில் ஆயிஷா, சாந்தி, ரச்சிதா போன்றோர் நாமினேட் ஆகிறார்கள். முதல் வார இறுதியில் வந்த கமல் ஹாசன் அவருடைய ஸ்டைலில் போட்டியாளர்களுடன் கலந்துரையாடினார்.
அதுமட்டுமின்றி சற்று விறுவிறுப்புக்கூட்டம் விதமாக சில விளையாட்டுகளையும் வைத்தார்.எபிசோடின் இறுதியில் மைனா நந்தினி வருவார் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தபடியே ஆட்டம் பாட்டத்துடன் அதிரடியான என்ட்ரி கொடுத்தார் நந்தினி.வீட்டிற்குள் சென்றவுடன் வழக்கம் போல் கலகலப்பாக அனைவரிடமும் பழக துவங்கிவிட்டார்.