• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மகாத்மா காந்தி 76 ஆவது நினைவு தினம்.., காந்தி அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் அஞ்சலி…

ByKalamegam Viswanathan

Jan 30, 2024

தேசத்தந்தை அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் 76 ஆவது நினைவு நாளை முன்னிட்டு காந்தி மியூசியத்தில் உள்ள அவரது திருவுருவ சிலை மற்றும் காந்தி அஸ்தி உள்ள இடத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காந்தி அருங்காட்சியகம் சார்பில் காந்தி நினைவு அருங்காட்சியகம் பொருளாளர் வழக்கறிஞர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். காந்தி நினைவு அருங்காட்சியகம் செயலாளர் நந்தாராவ் முன்னிலை வகித்தார். காந்தி நினைவு நிதி இயக்குனர் ஆண்டியப்பன் அருள் செய்தி வாசித்தார். நிகழ்ச்சியினை அமைதி சங்கம் தலைவர் சரவணன் ஒருங்கிணைத்தார். நிகழ்வில் காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், காந்தி மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் மற்றும் சபுரா பிவி ஆகியோர் பங்கேற்றனர். பள்ளி மாணவ, மாணவிகள் காந்தி அஸ்தி நினைவு இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் மற்றும் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சார்பில் நிறுவனத் தலைவர் நெல்லை பாலு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் கராத்தே கிராண்ட் மாஸ்டர் லண்டனைச் சேர்ந்த நாசிகா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த ஜான் மற்றும் கோடுலா ஆகியோர் பங்கேற்றனர். மேலும் மதுரையில் உள்ள அனைத்து அமைப்பைச் சார்ந்த பெருமக்கள் காந்தி சிலைக்கும் காந்தி நினைவு அஸ்தி உள்ள இடத்திலும் பெருமளவில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.