• Mon. Sep 14th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அருள்மிகு காசி விஸ்வநாதர் செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா..,

ByKalamegam Viswanathan

Sep 14, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் பாடசாலை தோப்பில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் 39 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோவிலில் காசி விஸ்வநாதர் நூதன சிவலிங்கம் பிரதிஷ்டை நிகழ்வும் அதனைத் தொடர்ந்து காசி விசுவநாதன் மற்றும் செல்வ விநாயகருக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை 4:30 மணிக்கு மங்கள இசை உடன் விநாயகர் பூஜையுடன் தொடங்கி கணபதி ஹோமம் யாகசாலை பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டது தொடர்ந்து கோ பூஜை நடைபெற்று பூர்ணாஹீதியுடன்
மகாயாகம் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்று காசி விசுவநாதர் மற்றும் விநாயகருக்கு பால் தயிர் சந்தனம் இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது.

அர்ச்சகர்கள் சுரேஷ் ஐயர் கார்த்திக் சர்மா ஆகியோர் வேத மந்திரங்கள் ஓதி கும்பாபிஷேகத்தை நடத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஆன்மிக குழு காத்த முத்து குருநாதர் தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.

தொடர்ந்து பஜனை சிவன் நால்வர் அடிகளார் பாண்டுரங்கன் பஜனையும் ஆனந்த ஐயப்ப பக்தர்கள் பஜனையும் நடைபெற்றது.