• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மேலக்கால் ஸ்ரீமலையாண்டி அய்யனார் ஸ்ரீகணவாய் கருப்பண்ணசாமி கோவில் மகா கும்பாபிஷேகம்

ByKalamegam Viswanathan

Jan 25, 2024

சோழவந்தான் அருகே மேலக்கால் கிராம் நாகமலை கனவாய் அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மலையாண்டி அய்யனார் ஸ்ரீகணவாய் கருப்பன்னசாமி கோவில் கும்பாபிஷேக விழா மூன்று நாட்கள் நடந்தது இவ்விழாவை முன்னிட்டு உத்தமபாளையம் மாணிக்கவாசக பட்டர் மதுரை குமார் பட்டர் ஆகியோர் 3 நாட்களாக நான்குகால யாக பூஜை நடத்தினர். இதற்கான கும்பாபிஷேக விழா காலை 9.30 மணி அளவில் விநாயகர் முருகன் பூர்ணகலா புஷ்பகலா சமேத ஶ்ரீ மலையாண்டி அய்யனார் ஸ்ரீகணவாய் கருப்புசாமி மற்றும் பரிவார தெய்வங்கள் முதலில் விமானம் கோபுரம் ராஜகோபுரம் போன்றவற்றிற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மலையாண்டி ஐய்யனார் கணவாய் கருப்புசாமி ஆகிய தெய்வங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது. அலங்காரம் நடந்து தீபாரனை பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலக்கால் மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர். காடுபட்டி போலீசார் பாதுகாப்பு செய்திருந்தனர்.