விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பொன்னகரத்தில் அமைந்துள்ள அருள்மிகு சித்தி விநாயகர், சந்தன மாரியம்மன், முனீஸ்வரர், பைரவர் ஆகிய தெய்வங்கள் உள்ளடக்கிய திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா 6ம் தேதி தை 23ஆம் தேதி அன்று கணபதி ஹோம பூஜை மகா சங்கல்பம் நவக்கிரக கோமபூஜையுடன் துவங்கியது அதைத் தொடர்ந்து மூன்று நாள் யாக பூஜைகள் நடைபெற்று தை25ம் தேதி 8 ம் தேதியான இன்று மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு கும்பநீர் தெளிக்கப்பட்டு அம்மனுக்கு மஞ்சள் பால் பன்னீர் தேன் இளநீர் சந்தனம் விபூதி உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.










