மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற யாகசால பூஜையில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


இதனைத் தொடர்ந்து புனித நீர் குடங்கள் எடுத்து சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இரும்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர்.. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார். அவருக்கு கோவில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. அமைச்சர் மூர்த்திக்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமையில் திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.

இதில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் பேரூராட்சி தலைவர்கள் சோழவந்தான் எஸ்.எஸ்.கே ஜெயராமன் வாடிப்பட்டி பால்பாண்டியன் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் துணைத் தலைவர் லதா கண்ணன் மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி முள்ளிப் பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா இரும்பாடி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தியாக முத்துப்பாண்டி கிராம முதன்மைக்காரர் நாகேந்திரன் கிராமப் பொருளாளர் ராஜாராம்மற்றும் கிராம பொதுமக்கள் வரவேற்பு கொடுத்தனர்.

பின்னர் கட்சியினர் மற்றும் அதிகாரியிடம் கோவிலுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து கேட்டறிந்தார் அப்போது கோவில் பகுதிகளில் பேவர் பிளாக் பதிக்க வேண்டும் என கட்சியினர் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். உடனடியாக எம்எல்ஏவிடம் சொல்லி அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றார்.




