• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரையில் அருள்மிகு லட்சுமி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக திருவிழா

ByN.Ravi

Jun 18, 2024

மதுரை மகாலட்சுமி நகர் குடியிருப்பு பகுதியில், உள்ள அருள்மிகு லட்சுமி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
முன்னதாக, முதல் காலையாக பூஜை கடந்த 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு துவங்கி,
வாஸ்து சாந்தி மிருதச கிரகணம் வேதிகா அர்ச்சனை மண்டப பூஜை உள்ளிட்ட
வைகளோடு துவங்கியது.
இதனைத் தொடர்ந்து, யாக கால பூஜைகள் விநாயகர் பூஜை, விஷாந்த சந்த பூஜை ,
வேதிகா அர்ச்சனை, மண்டப பூஜை உள்ளிட்டவை இரண்டாம் நாள் நடைபெற்றது. பின்னர், நான்கு காலை யாகசால பூஜைகள் நடைபெற்றது.
யாகசாலை பூஜையில் விழா குழுவினர் உட்பட அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு மனமுறுக வேண்டினர்.
நான்கு கால யாகசாலை பூஜைக்கு பிறகு யாக குண்டத்தில் வைக்கப்பட்ட புனித நீர் கலசங்கள் சிறப்பு அபிஷேகத்திற்கு பிறகு, யாகசலையில் இருந்து
கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அருள்மிகு லட்சுமி விநாயகர் கோவிலுடைய விமானத்திற்கு மகா அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கின்ற அடிப்பட்டையில் இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதில், பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, ஆன்றோர்கள் சான்றோர்கள் பொதுமக்கள் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.