கழுகுமலை ஐந்து வீட்டு தெய்வம் திரு மாளிகை ஸ்ரீ ஆதிபராசக்தி அனந்தம்மன் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விழா நடந்தது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு 18 விதமான அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை தர்மராஜன் பட்டர் மற்றும் சிவாச்சாரியார்கள் நடத்தினர். தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் திரு மாளிகை ஆதீன குரு திருமால் சுவாமி, பரம்பரை அறங்காவலர்கள் அனந்தகிருஷ்ணன், செல்லச்சாமி, சங்கரேஸ்வரன், திம்மப்பசாமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சிவகாசி சங்கரலிங்கநாடார் -உண்ணாமலையம்மாள் அவர்களின் குமாரர் நாகரத்தினம் – சுப்புலட்சுமி, ஆனந்தவேல் – தேவி ஆகியோர் செய்திருந்தனர்.