• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

இருக்கன்குடி மாரியம்மன் அலங்காரத்தில் மாகாளியம்மன்..!

Byவிஷா

Oct 21, 2023

விருதுநகர் மாவட்டம், அருப்புகோட்டையில் உள்ள புளியம்பட்டி மாகாளியம்மன் கோவிலில் உள்ள அம்மன் இருக்கன்குடி மாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அருப்புக்கோட்டை புளியம்பட்டியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ஐப்பசி மாத வெள்ளிக்கிழமை மற்றும் நவராத்திரி ஆறாம் நாளை முன்னிட்டு ஸ்ரீ மாகாளியம்மன், இருக்கன்குடி மாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இருக்கன்குடி மாரியம்மன் அலங்காரத்தில் காட்சியளித்த மாகாளியம்மனை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அதேபோல் ஆயிரங்கண் மாரியம்மன் திருக்கோவிலிலும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.