• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தந்தை விபத்தில் சிக்கி படுகாயம் – போலிசார் விசாரணை…

ByKalamegam Viswanathan

Oct 21, 2023

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சோமையாபுரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் மகன் வெங்கலம் வயது 35. தனது மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.

எல். ஐ. சி. ஏஜென்ட் ஆன வெங்கலம் தனது குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு சென்று விடுவதை தினமும் வழக்கமாகக் கொண்டு இருந்துள்ளார்.

இன்று காலை சோமையாபுரத்திலிருந்து தென்றல் நகர் நோக்கி இருசக்கர வாகனத்தில் தனது மூத்த மகனை அழைத்துச் சென்றுள்ளார்.

இவர்களது இருசக்கர வாகனத்திற்கு முன்னால் பெரிய கடை பஜார் பகுதியைச் சார்ந்த சுந்தரம் என்பவரது மகன் கணேசன் பெயிண்டிங் வேலைக்காக தென்றல் நகர் நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்துள்ளார்.

இருவரும் ஒரே பாதையில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் முன்னாள் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கணேசன், தென்றல் நகர் வளைவு பாதையில் திடீரென திரும்ப முற்பட்ட பொழுது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த வெண்கலம் நிலை தடுமாறி அவர் மீது மோதியுள்ளார்.

சைக்கிளில் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட வெங்கலம் தலையில் அடிபட்டு பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் இருப்பதைக் கண்ட, அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்ஸிற்க்கு தகவல் தெரிவித்து, பின்னால் சிறு, சிறு சிராய்ப்பு காயங்களுடன் அமர்ந்திருந்த அவரது மகனையும் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பலத்த காயம் அடைந்த வெண்கலத்தை பரிசோதித்த மருத்துவர்கள் பலத்த காயம் மற்றும் அதிக ரத்தப்போக்கு காரணமாக ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வடக்கு காவல் நிலைய போலிசார் விசாரனை செய்து வருகின்றனர்.