குழந்தை தொழிலாளர்களை ஒழிப்போம் , வருகிற பாராளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணிக்கு அதிக வாக்குகள் பெற்று வெற்றியைத் தருவோம் என – மகளிரணியினர் ஒரே கலரில் சேலை உடுத்தி , மகளிர் தின விழாவில் உறுதிமொழி ஏற்பு – கேக் வெட்டியும் கொண்டாட்டம்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள மதுரை தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் ,இன்று மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக அங்குள்ள திமுக கொடி வரைபடத்துடன் தயார் செய்யப்பட்ட கேக் – ஐ வெட்டி பெண்கள் மகளிர் தின விழாவை கொண்டாடிய நிலையில், குழந்தை தொழிலாளர்களை ஒழிப்போம் , வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் – க்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம் என மகளிரணியினர் ஒரே மாதிரி கலரில் சேலை உடுத்தி, இந்நன்னாளில் உறுதிமொழி ஏற்றனர். இவ்விழாவில், மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்