• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பிரதமர் மோடியை சந்திக்கும் மதுரை வீராங்கனை

ByA.Tamilselvan

May 19, 2022

மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் சாதனை புரிந்த மதுரை வீராங்கனை பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.
பிரேசில் நாட்டில் கடந்த மே 1ஆம் தேதி முதல் வரும் 15ஆம் தேதி வரை காது கேளாதோர் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
அந்த வகையில், மதுரை மாநகராட்சி அவ்வை பள்ளியில் படித்துவரும் 12 ஆம் வகுப்பு மாணவி ஜெர்லின் அனிகா இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்றார். பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த வீராங்கனையை 21-18, 21-16 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று ஜெர்லின் அனிகா தங்கம் வென்றுள்ளார்.
அதேபோல், கலப்பு இரட்டையர் பிரிவில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அபினவ் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து விளையாடிய ஜெர்லின் அனிகா மலேசியா நாட்டை சேர்ந்த கலப்பு இரட்டையர் ஜோடியை 21-14, 21-8 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றுள்ளனர். அதேபோல் பேட்மிண்டனில் மேலும் ஒரு பதக்கம் என மூன்று தங்கப் பதக்கத்தை வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தார் மதுரையை சேர்ந்த மாணவி ஜெர்லின் அனிகா. இவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.
அந்த வகையில், அவரை மதுரை ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் மாணவியை நேரில் சந்தித்து அரசு சார்பில் பாராட்டுத் தெரிவித்தாா். மேலும் தொடர்ந்து சாதிக்க உதவி அளிக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.
இந்த நிலையில், சாதனை வீராங்கனை ஜெர்லின் அனிகா வரும் 21ஆம் தேதி பிரதமர் மோடியை நேரில் சந்திக்க உள்ளார். அப்போது பிரதமரிடம் வாழ்த்து பெருகிறார். மேலும் பிரதமர் மோடியுடன் அமர்ந்து தங்க மங்கை ஜெர்லின் அனிகா காலை உணவை சாப்பிடுகிறார்.