மதுரை மேலமடை தாசில்தார் நகர் சௌபாக்கியம் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, இக்கோவிலில் முன்பாக குரு பெயர்ச்சி, குரு பிரதி ஹோமம், நவகிரஹோமம், ருத்ர ஹோமம் ஆகிவை நடைபெற்றது. தொடர்ந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் அர்ச்சனைகள் நடைபெற்றது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதை அடுத்து, பரிகார அர்ச்சனைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக மகளிர் பெண்கள் குழுவினர் செய்திருந்தனர்.




