• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரை பெரியார் பேருந்து நிலைய வணிக வளாக கட்டத்தில் தீவிபத்து;

Byகுமார்

Feb 23, 2024

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையம், பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாக கட்டம் கட்டப்பட்டது. தொடர்ந்து, பேருந்து நிலையம் ஏற்கனவே செயற்பாட்டில் உள்ள நிலையில், வணிக வளாகம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.119 கோடியில் 474 கடைகள் கட்டப்பட்டுள்ள கட்டடம் பல்வேறு வசதிகள் உடன் திறப்பு விழா காண தயாராக இருந்து வருகிறது.
இந்த நிலையில் , பெரியார் பேருந்து நிலைய வணிக வளாகத்தினுள் முதலாம், இரண்டாம் தளத்தில் நெகிழி தாள்கள், எலக்ட்ரிக் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த எளிதில் தீப்பற்றி எரியும் பொருட்களில் தீ பற்றி விபத்து ஏற்பட்டு கரும்புகை வளாகம் முழுவதும் பரவி புகை வெளியேறியது.
தொடர்ந்து, 2 தீயணைப்பு வாகனம் மூலம் தீதடுப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும், விபத்து குறித்து திடீர்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.