• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரை: நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யாதேவி மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் வேட்புமனு தாக்கல்

Byகுமார்

Mar 26, 2024

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யா தேவி தனது வேட்புமனுவை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் தாக்கல் செய்தார்.

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மதுரை வடபழஞ்சி அருகே உள்ள மணப்பட்டியை சேர்ந்த சத்யா தேவி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் தமுக்கம் மைதானத்தில் தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் படத்துடன் 100 க்கும் மேற்ப்பட்ட இரு சக்கர வாகனங்களுடன் திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக வந்து திருவள்ளூர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார், அதன் பின்பு தனது வேட்புமனுவை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் தாக்கல் செய்தார் அப்பொழுது கொள்கை பரப்பு செயலாளர் அருண்ஜெயசீலன் மண்டல செயலாளர்கள் அப்பாஸ் சிவானந்தம் மற்றும் மகளிர் பாசறை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.