• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தந்தை மறைவு..,

ByKalamegam Viswanathan

Mar 28, 2025

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு. வெங்கடேசன் தந்தை சுப்புராம் ( 79) உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார் நாடாளுமன்ற உறுப்பினர் தந்தை சுப்ராம் பசுமலை பள்ளியில் பியூசி முடித்துவிட்டு விவசாயம் பார்த்து வந்தவர்.

உடல்நிலை சரியில்லாமல் கடந்த ஒரு மாதமாக மாட்டுத்தாவணி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் மற்றும் அரசு தோப்பூர் நெஞ்சக பிரிவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 4:30 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது உடல் அஞ்சலிக்காக ஹார்விபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மறைந்த சுப்புராமன அவர்களுக்கு நல்லம்மாள் என்ற மனைவியும் இரண்டு மகன் மூன்று மகள்கள் அதில் மூத்த மகன் சு. மகாலிங்கம் கட்சி உறுப்பினராகவும், சு. வெங்கடேசன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்,

மூன்று மகள்களில் ஈஸ்வரி என்பவர் சில ஆண்டுகளுக்கு முன் காலமான நிலையில் லட்சுமி, கோகிலா ஆகியோர் திருமணமாகி திருப்பரங்குன்றம் பகுதியில் வசித்து வருகிறார்கள்.இறுதி நிகழ்வு இன்று மாலை 6 மணிக்கு ஹார்விப்பட்டி இல்லத்தில் நடைபெற உள்ளது இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தந்தைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு அரசியல் கட்சித் உறுப்பினர்கள் மற்றும் எழுத்தாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.