• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டண வசூல் குறித்து, மதுரை எம்பி சு.வெங்கடேசன் X தலத்தில் பதிவு

ByKalamegam Viswanathan

Jan 30, 2024

மதுரை விமான நிலையத்திற்கு நேற்று வந்த பயணி ஒருவரிடம் அங்குள்ள தோல்வியுற்றில் வேலை செய்யும் தனியார் வட மாநில ஊழியர் பார்க்கிங்கிற்கு கூடுதல் பணம் கேட்பதாக அந்த பயணி காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்தார் இது வைரலானது.

இந்த நிலையில் இது குறித்து மதுரை எம்பி சு வெங்கடேசன் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

மதுரை விமானநிலையத்தில் பார்க்கிங் கட்டணம் அதிகமாக வசூல் செய்யப்படுவதாக வரும் குற்றச்சாட்டு வருவது குறித்து விமானநிலைய ஆலோசனைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய பொழுது அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தார்கள்.

கீழே உள்ள காணொலி அந்த குற்றச்சாட்டின் உண்மையை அம்பலப்படுத்துகிறது.

இதற்கு பொறுப்பான ஒப்பந்தக்காரர் மற்றும் வசூலித்த நபர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வணிக மேலாளரிடம் விளக்கம் கோரப்பட வேண்டுமென மதுரை விமானநிலைய இயக்குநரை கேட்டுக்கொள்கிறேன் என தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.