• Fri. Apr 26th, 2024

முதியவரின் உயிரை காப்பாற்றிய மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை

Byp Kumar

Mar 29, 2023

ஆபத்தான இதய சிதைவினால் பாதிக்கப்பட்ட முதியவரின் உயிரை காப்பாற்றிய மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை.
தென் தமிழ்நாட்டில் பல்வேறு சிறப்புப் பிரிவுகளுடன் கூடிய முதன்மை மருத்துவமனையாகத் திகழும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை Ventricular Septal Rupture பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த 76 வயதான முதியவருக்கு வெற்றிகரமாக சிகிச்சையளித்து அவரது உயிரை காப்பாற்றியிருக்கிறது
இந்நோயாளியின் நிலை குறித்து மருத்துவமனையின் இதயவியல் துறையின் முதுநிலை நிபுணர் மருத்துவர் R. சிவக்குமார் கூறியதாவது: சுவாசிப்பதில் சிரமம், அவ்வப்போது இருமலுடன் சளி வெளியேறுதல் ஆகிய பிரச்சனைகளோடு இந்நோயாளி எங்களது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தார். அவருக்கு செய்யப்பட்ட எக்கோ கார்டியோகிராம் பரிசோதனை இதய இடதுகீழறை பிரச்சனை இருப்பதை வெளிப்படுத்தியது அதைத் தொடர்ந்து அவருக்கு செய்யப்பட்ட கரோனரி ஆஞ்சியோகிராம் சோதனை, கரோனரி தமனி நோய், ஒற்றை நாள நோய் மற்றும் LAD -ல் ஸ்டென்ட் வழியாக தடையற்ற இரத்தஓட்டம் இருப்பதை காட்டியது.
இதயத்தின் இடது மற்றும் வலது கீழறைகளைப் பிரிக்கின்ற சுவரில் ஒரு துளை உருவாகியிருப்பதையே VSR என அழைக்கிறோம். இதற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இதயத்தின் இரு அறைகளிலும் உள்ள இரத்தம் ஒன்று கலக்கத் தொடங்கும் கலந்த இரத்தம் நுரையீரல்களுக்கு பயணித்து அவற்றை நிரப்பி உயிரிழப்பை விளைவிக்கும். இந்த சிக்கலுள்ள நோயாளிகள் சுமார் 90% நபர்கள் உயிரிழக்கின்றனர் என்று தெரிவித்தார்.


அதனைத் தொடர்ந்து பேசிய இதையே மயக்கதியில் நிபுணர் டாக்டர் குமார் பொதுமைக்க மருந்தின் கீழ் செய்யப்பட்ட இந்த சிகிச்சைக்கு ஏறக்குறைய இரண்டு மணி நேரங்கள் ஆனது வெற்றிகரமான இந்த சிகிச்சை செய்யப்பட்டதற்கு பின் நான்கு நாட்களுக்கு பிறகு இந்த நோயாளி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் இப்போது மற்றவர்கள் போல தனது இயல்பான செயல்பாடுகளை இவர் மீண்டும் செய்ய தொடங்கி இருக்கிறார் என்று தெரிவித்தார்
இந்நிகழ்வில் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ நிர்வாகி டாக்டர் கண்ணன், விரைவில் துறையின் முதல் நிபுணர் டாக்டர் சிவகுமார், இதய மயக்கத்தில் துறையின் தலைவர் டாக்டர் குமார், இதயவியல் துறையின் முதல்நிலை நிபுணர் டாக்டர் கணேசன், டாக்டர் சம்பத் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *