• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பி மண்டல விளையாட்டுப் போட்டிகள்

ByN.Ravi

Oct 7, 2024

மதுரை காமராசர் பல்கலைக் கழக பி மண்டலத்துக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையான இறகுபந்து மேஜைப்பந்து மற்றும் சதுரங்கம் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் விவேகானந்த கல்லூரியில் நடைபெற்றன. இப்போட்டிகளை, விவேகானந்த கல்லூரி செயலர் சுவாமிஜி வேதானந்த, கல்லூரி குலபதி சுவாமிஜி கல்லூரி முதல்வர் முனைவர் தி. வெங்கடேசன் துவக்கி வைத்தனர். சதுரங்க போட்டியில், மதுரை கல்லூரி முதலிடமும் மன்னார் திருமலை நாயக்கர் கல்லூரி இரண்டாம் இடமும். மேஜைப்
பந்து போட்டியில் மதுரை கல்லூரி முதல் இடமும், சரஸ்வதி நாராயணன் கல்லூரி இரண்டாம் இடமும், இறகுபந்து போட்டியில், சௌராஷ்டிரா கல்லூரி முதல் இடமும், தியாகராஜ ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட், இரண்டாம் இடமும் பெற்றன.
வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு விவேகானந்த கல்லூரி முதல்வர் வெங்கடேசன் பரிசுகளை வழங்கி பாராட்டினார். மதுரை கல்லூரி, வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, சரஸ்வதி நாராயணன் கல்லூரி, சௌராஷ்டிரா கல்லூரி, தியாகராஜ ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட், மதுரை காமராஜ பல்
கலைக்கழகம், பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கல்லூரி, கேபி தேசிய கல்லூரி ஆகிய கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளை, விவேகானந்த கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் ஜெ. நிரேந்தன் ஒருங்கிணைப்பு செய்தார்.