• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மதுரை ஹனா ஜோசப் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

Byகுமார்

Jul 12, 2022

மதுரை ஹனா ஜோசப் மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு 15 மணி நேர மூளை தண்டுவட அறுவைசிகிச்சை செய்து கட்டியை நீக்கி மருத்துவர்கள் சாதனை
திருச்சி வெங்கடேஸ்வரா நகர் துரைராஜன் என்பவரின் மகள் நிதிஷா (வயது 11) 6ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு மூளை தண்டுவட பகுதியில் “ஸ்வானானோமா” எனப்படும் கட்டியிருந்தது. கடந்த 8 மாதமாக நோயினால் பாதிக்கப்பட்டு உடல் நிலை செயல் இழந்து அவதியுற்றார்.


இதனை தொடர்ந்து மதுரை ஹனா ஜோசப் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையின் தலைமை நரம்பியல் துறையின் இயக்குனர் அருண்குமார் தலைமையில் டாக்டர் வீரபாண்டி டாக்டர் செந்தில்குமார் உட்படபத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்களால் கடந்த (15-06-22 )அன்று நடந்த முதல் கட்ட அறுவை சிகிட்சை 9 மணி நடைபெற்றது. 4 நாட்கள் கழித்து நடைபெற்ற 2வது முறையாக கடந்த (18-06-22) அன்று 6 மணி நேரம் அறுவை சிகிச்சையில் சிறுமி நிதிஷா பூரண குணமடைந்தார்.இந்த பத்திரிகையாளர் சந்திப்பதற்கான ஏற்பாட்டினை மருத்துவமனையின் பொது மேலாளர் சேகர் செய்திருந்தார் அதனைத் தொடர்ந்து
இது குறித்து ஹனா ஜோசப் மருத்துவ மனை அருண்குமார் கூறுகையில்:
மிகவும் கடினமான மூளை தண்டுவட அறுவை சிகிட்சையில் பொறுமையாக சிறிது கவனம் சிதறினாலும் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு சிறந்த முறையில் அறுவை சிகிட்சை அளிக்கப்பட்டது.
இதுவரை 17 வயதுக்குட்பட்வர்களுக்கு மட்டுமே அறுவை சிகிட்சை நடைபெற்றது . தற்போது 11 வயது சிறுமி நிதிஷாவுக்கு அதுவும் 21 கிலோ எடை குறைந்த சிறுமிக்கு அறுவை சிகிட்சை நடைபெற்றது குறிப்பிடத்தகது.