மதுரை மண்டல பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான பெண்கள் விளையாட்டு போட்டிகள் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது இப்போட்டியில் விருதுநகர், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களிலுள்ளபாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து 220 வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியை கல்லூரி முதல்வர் முனைவர் நந்தகுமார் தேசியக் கொடி ஏற்றி விளையாட்டு வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு போட்டிகளை தொடங்கிவைத்தார்.

விளையாட்டு போட்டிகளில் கபடி, கோகோ, வாலிபால், டென்னிகாய்ட் , பேட்மிண்டன், பால் பேட்மிண்டன், செஸ் மற்றும் கேரம் விளையாட்டுகளும் தடகள போட்டிகளில் 100மீ, 200மீ, 400மீ, 800மீ, 1500மீ, 4 x 100மீ தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் குண்டு எறிதல், வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகளும் நடைபெற்றன.
நான்கு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் இறுதி நாளில் நிகழ்ச்சியில் உடற்கல்வி இயக்குனர் மதனகோபால் வரவேற்புரையாற்றி போட்டிகளின் அறிக்கையை சமர்ப்பித்தார் கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் திரு.வி கிரிதரன் அவர்கள் விழா சிறப்புறையாற்றி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.
போட்டிகளில் 160 புள்ளிகள் பெற்ற மதுரை அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு போட்டிகளின் முதல் இடத்தையும். 72 புள்ளிகள் பெற்ற தேனி மகாத்மம் பாலிடெக்னிக் கல்லூரி தடகள போட்டிக்கான கோப்பையை வென்றனர். 21 புள்ளிகள் பெற்ற தேனி மகாத்மம் பாலிடெக்னிக் கல்லூரி வீராங்கனை கங்காதேவி தனித்திறன் போட்டிகளின் முதல் இடத்தை பிடித்து தனித்திறன் கோப்பையை வென்றார்.
198 புள்ளிகள் பெற்ற மதுரை அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு மற்றும் தடகள போட்டிகளுக்கான ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றனர். இறுதியில் விளையாட்டுத் துறையின் சேர்மன் திரு. இளங்கோவன் நன்றியுரையாற்றினார்.