மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகம் முன்பு மாஸ்டர் வா ராமுண்ணி பிறந்தநாள் நிகழ்வு மாநிலத் தலைவர் அரசு தலைமையில் மாநில பொருளாளர் நீலகண்டன் முன்னிலையில் நடைபெற்றது.

மாநிலத் துணைச் செயலாளர் துறை பிரபாகர் சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்வில் சங்க நிர்வாகிகள் இரு பிரிவாக செயல்படுவதால் ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் சங்க கட்டிடத்திற்கு பூட்டு போட்டு சென்று விட்டனர்.இதனால் இயக்க நிறுவனர் மாஸ்டர்
வா ராமுன்னி பிறந்த தினத்தை முன்னிட்டு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஊர்வலமாக வந்து அலுவலக வாயில் முன்பு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மேலும் மாநில தலைவர் அரசு கூறுகையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்க நிர்வாகிகள் மதுரை மாவட்ட இயக்க அலுவலகமான ஜே எஸ் ஆர் மாளிகையை 15.4.21 ல் பூட்டை உடைத்து உள்ளே பயன்படுத்தி வருகின்றனர் எனவும் இயக்கம் 2 பிரிவாக பயன்படும் சூழ்நிலையில் மாற்றுச்சாவி பெற்று வழங்க வேண்டும் என 18.5.23 ல் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்க்கும் நாளில் மனு கொடுத்தும் தீர்வு எட்டப்படாத நிலையில் மீண்டும் மாவட்ட அலுவலகத்திற்கு பூட்டு போடபட்டது. இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றார்.

இதில் மாவட்டத் தலைவர் க.செல்வகுமரேசன்மாவட்டச் செயலாளர் ஓ.வி.பாரதி சிங்கம்
மாவட்டப் பொருளாளர் மு.தென்னவன் மாநில துணைச் செயலாளர் பா. ஆறுமுகம்
மாநில செயற்குழு உறுப்பினர் ஆடம்ஸ் மற்றும் எல்லையுறு வட்டாரப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள இயக்க உறுப்பினர்கள் என
100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.