• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை மாவட்டத்தில் ஆட்டோ வியாபாரிகள் நலச்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

Byகுமார்

Jul 23, 2024

மதுபோதையில் ஓட்டும் வாகனங்களுக்கான அபராதம் வழக்கு இறுதி அறிக்கை தாமதத்தால் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் காவல்துறை அடிக்கடி பணம் கேட்பதாக கூறி ஆட்டோ வியாபாரிகள் நலச்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மதுரை மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட சரக்கு வாகனங்கள், ஷேர் ஆட்டோக்கள் ஆட்டோக்கள் வாடகை அடிப்படையில் இயக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் வாடகை வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்கள் மதுபோதையில் வாகனம் ஓட்டும்போது போக்குவரத்து காவல்துறையினரின் தணிக்கையின்போது 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுவருகிறது.

கடந்த 2019 முதல் மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் குற்றத்திற்கான அபராதத் தொகையை நீதிமன்றம் மூலமாக செலுத்தும் நடைமுறையில் தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கான வழக்கு முடிக்கப் பெறாமல் உள்ளதால் வாகனங்கள் புதுப்பிக்க இயலாத நிலையில் உள்ளதாகவும், அபராதத் தொகையை காவல் நிலையத்தில் பணம் செலுத்தியும் காவலர் இடம் மாற்றம் ஆனதாக கூறி கட்டிய பணம் ஏமாற்றப்பட்டு அபராதத்தொகை இழக்கும் நிலை உள்ளதாலும், நீதிமன்றம் மூலமாக வழக்கு முடிக்கப்பட்ட நிலையில் காவல் துறையில் இறுதி அறிக்கை (Clearance) பல வருடங்களாக கிடப்பில் உள்ளதால் அலுவலக சிக்கல்கள் உள்ள சூழ்நிலை உள்ளதாக கூறியும், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்காக உடனடியாக அபராத பணம் செலுத்தும் வகையில் காவல்துறைக்கு உத்தரவிட கோரியும் மீனாட்சி ஆட்டோ வியாபாரிகள் நலச்சங்கத்தினர் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இது தொடர்பாக பேசிய ஆட்டோ வியாபாரிகள் சங்க தலைவர் கணேசன் :

மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கான அபராதத் தொகையை காவல் நிலையத்தில் பணம் செலுத்தியும் காவலர் இடம் மாற்றம் என கூறி கட்டிய பணத்தை அடிக்கடி கேட்பதாகவும் வழக்கு முடிக்கப்பட்ட நிலையில் காவல்நிலையத்தில் இறுதி அறிக்கைபல வருடங்களாக கிடப்பில் உள்ளதால் வாகனங்களை புதுப்பிக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்காக உடனடியாக அபராத பணம் செலுத்தும் வகையில் காவல்துறையின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.