• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரை- வாடிப்பட்டி அருகே போலி ரசீது தொடர்பான புகார்

ByKalamegam Viswanathan

Apr 29, 2023

மதுரை. வாடிப்பட்டி அருகே காடுபட்டி ஊராட்சியில் போலி ரசீது தொடர்பான புகார் குறித்து ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்.ஆய்வு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் காடுப்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவராக ஆனந்தன் என்பவரும் துணைத்தலைவராக பிரதாப் என்பவரும் ஊராட்சி செயலாளராக ஒய்யனன் என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் துணைத் தலைவராக உள்ள பிரதாப் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி மன்றத்தின் சார்பில் போலி ரசீதுகளை அச்சடித்து நீதிமன்றம் மின்சார வாரியம் உள்ளிட்ட அரசு துறைகளை ஏமாற்றியதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் தணிக்கை வீராசாமி காடுபட்டி ஊராட்சி அலுவலகம் வந்து நேரில் ஆய்வு செய்தார். அவரோடு வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், காடுபட்டி ஊராட்சியில் முன்பு பணியாற்றிய ஊராட்சி செயலாளர்கள் தங்கள் தரப்பு செயல்களை எடுத்துரைத்தனர்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை.உதவி இயக்குனரிடம் கேட்டபோது விசாரணை மற்றும் ஆய்வுக்காக சில கோப்புகளை எடுத்து சொல்வதாகவும் ஆய்வுக்கு பின்னரே எதுவும் சொல்ல முடியும் என்று தெரிவித்தார். மேலும் புகார் குறித்து ஊராட்சியில் உள்ள பொது மக்களிடம் எந்த ஒரு விசாரணையும் நடத்தவில்லை என்பதால் இது ஒரு கண்துடைப்பாக இருக்குமோ என பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர் ஆகையால் புகாரின் மீது விரைவில் ஆய்வு செய்து தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்..