மாநில அளவிலான மூத்தோர் தடகளப்போட்டியில் மதுரை கரிமேடு காவல் நிலைய சட்டம் ஒழுங்கு பிரிவு எஸ்எஸ்ஐ எஸ்.குமரேசன் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் 42வது மாநில அளவிலான மூத்தோர் தடகளப்போட்டிகள் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரம் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் மதுரை கரிமேடு சட்டம் ஒழுங்கு பிரிவைச் சேர்ந்த எஸ்எஸ்ஐ எஸ்.குமரேசன், 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். அவரை மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். மேலும் மதுரை மாநகரைச் சேர்ந்த 5 ஆண் காவலர்கள், 4 பெண் காவலர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றனர். அவர்களுக்கும் காவல் ஆணையர் லோகநாதன் பரிசும், சான்றிதழும் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
மேற்கண்ட விளையாட்டு வீரர்கள் அனைவரும் மார்ச் மாதம் பெங்களூருவில் நடைபெறும் அகில இந்திய விளையாட்டுப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






; ?>)
; ?>)
; ?>)
