• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரை சித்திரை திருவிழா: ஏப்ரல் 23ல் உள்ளூர் விடுமுறை

Byவிஷா

Apr 20, 2024

மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சம்பவம் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவிருப்பதால், அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சித்திரை திருவிழா நடைபெறும் நாட்களில் தினமும் இரவு சுவாமி அம்பாள் 4 மாசி வீதிகளில் உலா வரும் நிலையில், மதுரையில் பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் குவிகின்றனர். தினமும் மாலை நேரங்களில் மாசி வீதிகள் மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. நாளை ஏப்ரல் 21ம் தேதி கள்ளழகர் அழகர் மலையிலிருந்து மதுரையை நோக்கி புறப்பட உள்ளார். நாளை மறுதினம் ஏப்ரல் 22ம் தேதி காலை மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நிகழ்வு நடைபெற உள்ளது. ஏப்ரல் 23ம் தேதி அதிகாலை 5.51 மணியிலிருந்து 6.10 மணிக்குள் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும்.
இதை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் குவிந்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நாளான ஏப்ரல் 23ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மே 11ம் தேதி பணிநாளாக செயல்படும் என அறிவித்துள்ளார்.