• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை ஆயுதப்படை காவலர் மாரடைப்பால் மரணம்

ByKalamegam Viswanathan

Mar 28, 2023

மதுரை ஆயுதப்படை காவலர் ராஜபாண்டி வில்லாபுரம் அருகே .உள்ள வர்ம .மருத்துவமனையில் முழங்கால் வலிக்கு சிகிட்சை பெற சென்றவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்.
காவலர் ராஜபாண்டி உடல் உடற்கூறு பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. காவலர் மனைவி கண்மணி அளித்த புகாரின்பேரில் அவனியாபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை
.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ராஜபாண்டி ( வயது 36) இவரது மனைவி கண்மணி ( வயது 30) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ராஜபாண்டி மதுரை ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார் கடந்த சில நாட்களாக மூட்டு வலியில் அவதிப்பட்டு வந்ததால் வில்லாபுரம் வீரபத்திரப்பிள்ளை காம்பவுண்ட் பகுதியில் உள்ள சிவா வர்ம கிளினிக் என்னும் வர்ம மருத்துவமனையில் முழங்காலுக்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முழங்கால் வலியில் அவதிப்பட்டு வந்தவருக்கு சிகிட்சை அளிக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனதால் ராஜபாண்டியின் மனைவி கண்மணி அவனியாபுரம் காவல் நிலையத்தில் தனது கணவருக்கு தவறான சிகிச்சை அளித்ததால் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக புகார் அளித்தார். இதனை தொடர்ந்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த ராஜபாண்டியன் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கண்மணி அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து அவனியாபுரம் போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.