மதுரை காமராஜர் சாலை – குருவிக்காரன் சாலை பாலம் ரோடு சந்திப்பு அருகே நீட், ஜே.இ.இ., தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் விநாயக் இன்ஸ்டிடியூட்டை மதுரை ஆதீனம் 293வது குரு மகாசன்னிதானம் ஶ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஸ்ரீஞானசம்மந்த பரமச்சாரியசுவாமிகள் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் விநாயகா இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் நிர்வாகிகள் முரளிமணிரங்கராஜ், ராஜேஷ், நாராயணபிரபு, குடும்பத்தினர் மற்றும் சமூகப் பெரியவர்கள் சமுதாய ஆர்வலர்கள் கலந்து கொண்டு நிறுவனம் வெற்றி பெற வாழ்த்துக்களை கூறினார்.
அதனைத் தொடர்ந்து நிர்வாகிகள் மூன்று பேரும் ஒன்றாக அமர்ந்து செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்களிடம் கூறியது..,
மதுரையில் விநாயகா இன்ஸ்டிட்யூட் என்னும் ஒரு கல்வி சார்ந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளோம். இதற்கு முன்னர் கடந்த 15 வருடங்களாக தேனியில் ஒரு கல்வி சார்ந்த தொழில் செய்து கொண்டிருந்தோம். இப்பொழுது மதுரையில் விநாயகா இன்ஸ்டயூட் ஆரம்பித்து நீட், ஜே.இ.இ., தேர்வுகளுக்கும் மற்றும் ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பு 11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சி மையம் ஆரம்பித்துள்ளோம். மதுரையில் ஆன்மீகம் ரீதியாக ஆரம்பிக்கலாம் என்பதால் மதுரை ஆதீனம் 293வது குரு மகாசன்னிதானம் ஶ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஸ்ரீஞானசம்மந்த பரமச்சாரியசுவாமிகள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். எங்கள் பயிற்சி மையத்தில் குறைவான கட்டணத்தோடு தரமான கல்வி வழங்குவது எங்களது நோக்கம் அதில் சிறந்த மாணவர்கள் 25 பேருக்கு எங்கள் நிறுவனத்தின் சார்பில் 25%ஸ்காலர்ஷிப் வழங்குகிறோம். ஏழை, எளிய மாணவர்கள் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வில் வெற்றி பெற சிறந்த கல்வி வழங்குகிறோம் என கூறினார்.