ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் -என்.ஸ்ரீ லட்சுமி பிரசாத் தயாரித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “மதராஸி”
இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், விக்ராந்த்,ஷபீர் கல்லாரக்கல் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தமிழ்நாட்டை சீர்குலைக்க பயங்கரவாத கும்பல் ஒன்று தமிழ்நாட்டிற்குள் நுழைகிறது.
அந்த பயங்கரவாத கும்பல் தமிழ்நாட்டில் துப்பாக்கி விநியோகிக்கும் திட்டத்தை உருவாக்க முயற்சிக்கிறது.
இந்த தகவல் தேசிய புலனாய்வு அமைப்பிற்கு தெரிய வர அதை தடுக்கும் முயற்சியில் பிஜு மேனன் தலைமையிலான குழு ஒன்று களத்தில் இறங்குகிறது.
இன்னொரு பக்கம், தனது காதலி தன்னை விட்டு சென்று விட்டாள் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று சிவகார்த்திகேயன் சுற்றிக் கொண்டிருக்கிறார்.
பயங்கரவாத கும்பலுக்கும் தேசிய புலனாய்வு அமைப்பு குழுவுக்கும் நடக்கும் சண்டையில் பிஜுமேனன் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

அதே சமயத்தில் தற்கொலைக்கு முயன்ற சிவகார்த்திகேயன் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
இவர்கள் இருவரது சந்திப்பு மருத்துவமனையில் எதேர்ச்சியாக நடக்கிறது.
தற்கொலை செய்ய முயற்சிக்கும் சிவகார்த்திகேயனை வைத்து பயங்கரவாத கும்பலை அழிக்க பிஜூ மேனன் திட்டம் தீட்டுகிறார். இதற்கு சிவகார்த்திகேயனும் சம்மதிக்கிறார்.
சிவகார்த்திகேயனை பற்றி விசாரிக்கும் பொழுது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அதற்காக சுமார் 15 ஆண்டுகள் சிகிச்சை பெற்று வந்தவர் என்றும் பிஜு மேனனுக்கு தெரிய வருகிறது.
இதன் பின்னர் சிவகார்த்திகேயனை வைத்து பயங்கரவாத கும்பலை அளித்தாரா?
சிவகார்த்திகேயன் மனநலம் எதனால் பாதிக்கப்பட்டது?
சிவகார்த்திகேயன் காதலி ஏன் இவரை விட்டு பிரிந்து சென்றாள் ?
மீண்டும் சேர்ந்தார்களா? இது தான் படத்தின் மீதி கதை
அதிரடி ஆக்ஷன் காட்சிகள் பார்வையாளர்களை ஈர்த்துள்ளார் சிவகார்த்திகேயன்.
ஆக்ஷன் காட்சிகளில் மட்டுமின்றி செண்டிமெண்ட் காட்சிகளிலும் அசத்தியுள்ளார்.
படத்தின் நாயகி ருக்மணி வசந்த், நீண்ட நேரம் திரையில் தோன்றாவிட்டாலும் திரைக்கதையோடு பயணித்துள்ளார். வித்யூத் ஜமால், மாஸ் வில்லனாக நடித்துள்ளார்.
ஹாலிவுட் நடிகரைப் போல ஆக்ஷன் காட்சிகளில் பார்வையாளர்களை கவர்ந்துள்ளார்.
சபீர் கல்லரக்கல், பிஜு மேனன், விக்ராந்த் பார்வையாளர்கள் மனதில் பதியும் படியான அவர்களது கதா பாத்திரத்திற் கேற்றவாறு சிறப்பாக நடித்துள்ளனர்.
படத்தின் ஆரம்ப முதல் இறுதி வரை பின்னணி இசையிலும் சரி பாடல்களும் சரி பார்வையாளர்களின் காதுகளை குளிர வைத்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத்,
படம் முழுவதும் பிரம்மாண்டமாக ஹாலிவுட் ரேஞ்சில் படம் பிடித்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் சுதீப் இளமோன் . மீண்டும் கம் பேக் கொடுத்துள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
எதிர்காலத்தில் நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் உருவாகக் கூடாது என்ற கருவை மையமாக வைத்து உருவாக்கியுள்ளார் ஏ ஆர் முருகதாஸ்.
ஆக்ஷன்,கமர்ஷியல், சென்டிமென்ட் என்ற கலவையோடுரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படம் ஆக உருவாகியிருக்கிறது “மதராஸி”
மொத்தத்தில் “மதராஸி” மாஸ்