• Thu. May 2nd, 2024

வேலம்மாள் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி…

ByKalamegam Viswanathan

Dec 9, 2023

மதுரை விரகனூர் பகுதியில் அமைந்துள்ள வேலம்மாள் பொறியியல் கல்லூரியின் 11 வது பட்டமளிப்பு விழா வேலம்மாள் அறக்கட்டளையின் தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி 460 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்வில் வேலம்மாள் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி வேல்முருகன், கல்லூரியின் முதுநிலை முதல்வர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் முதல்வர் அல்லி, பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய வேலம்மாள் அறக்கட்டளையின் தலைவர் முத்துராமலிங்கம்,நான் முதன்முதலில் இன்ஜினியரிங் முடிச்சிட்டுதான் வந்தேன் மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கியில் பொறியாளர் பிரிவில் வீடு குறித்த பணியில் சேர்ந்தேன்,என்னால் ஒரு சில விஷயங்கள் முடியாத சூழலில் ஒரு கொத்தனார் அரை மணி நேரத்துல செய்து முடித்தார், அந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் நடந்தது, இதுபோல் ஒவ்வொரு விஷயமும் முயற்சி பண்ணனும் சரியான நேரத்தை பயன்படுத்தனும்,அது மாதிரி ஒழுக்கமாக இருக்கிறது தான் மிக முக்கியம், ஆரம்பத்தில் ஒரு சின்ன பள்ளியாக சென்னையில் ஆரம்பித்தோம் அதன்பிறகு மதுரையில் வந்து இன்று வேலம்மாள் கிராமம் என்று உருவாக்கி பள்ளி கல்லூரி பொறியியல் கல்லூரி நர்சிங் காலேஜ் மெடிக்கல் காலேஜ் என்று பல்வேறு துறையில் முன்னேறி இருக்கோம், அதே மாதிரி சுற்றுப்புறங்கள்ல வேலம்மாள் வில்லேஜ் மூலமாக பகுதியில் உள்ளவர்களுக்கு 5000 பேரும் வேலை வாய்ப்பு உருவாக்கி இருக்கோம் ஒரு தியேட்டர் மற்றும் மால் ஆகியவை உருவாகி வருகிறது. இதனால் நமக்கு சுற்றுப்புறங்களில் வேலை வாய்ப்பு அளிக்கிறது மட்டுமல்லாமல் நம்மளோட வெற்றிக்கும் உங்களோட முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்காக அமையும், பொறியியல் பட்டதாரியோட நாம் இருப்பதில்லை அதற்கு அடுத்தகட்டமான முயற்சி எடுத்து நம்ம தொடர்ந்து பயணம் ஒரு இலக்கை நிர்ணயித்து பயணம் செய்து மிகப் பெரிய வெற்றி அடையலாம், எனக்கு ரோல் மாடல் யார் என்றால் துபாயை உருவாக்கியவர் சிங்கப்பூரை உருவாக்கியவர் சீனாவை உருவாக்கியவர் நம் பிரதமர் மோடி. ரசிய அதிபர் புதின் நமது பிரதமரை மிகச் சிறந்த உள் கட்டமைப்பு தலைவர் என புகழ்ந்துள்ளார்.

நம்ம பிரதமர் மோடி படம் இவங்களோட படத்தை தான் நான் வீட்டில் அலுவலத்தில் வைத்திருக்கேன்ருக்கேன் இவர்களோட திட்டமிடல் சரியாக இருந்தால்தான் இவர்களால் ஜெயிக்க முடிந்தது. அதனால இவர்களை நான் ரோல் மாடலாக வைத்துள்ளேன். என்னோட வெற்றிக்கு அரசியல் கட்சியோ, எந்த ஊரு மதமோ, ஜாதியோ இல்லை என்னுடைய சொந்த முயற்சியிலும், உழைப்பிலும் முன்னேறி வந்தேன் என்றார்.

உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி கூறுகையில், மாணவர்களாகிய நீங்கள் படித்தோம், முடித்தோம் என்றில்லாமல் படிப்புக்கு பின் சாதிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. குறிப்பாக சீனாவை பார்த்தோம் ஆனால் குண்டூசி கத்திரி மற்றும் சிறிய சிறிய உபயோக பொருட்களை தயாரித்து இன்று உலக வல்லரசு என குறிப்பிடும் படி உயர்ந்துள்ளது இதற்கு முக்கிய காரணம் அங்கு நடைபெற்ற தொழில் முன்னேற்றம் தொழில் முயற்சி அதே போல் மாணவர்களாகிய நீங்கள் இன்று பட்டம் பெற்ற 460 பேரும் ஒரு தொழில் முனைவராக உயர்ந்து நாட்டுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்படுவீர்கள் என வாழ்த்துக்களை கூறுகிறேன் என உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *