மதுமிதா 12 இவருக்கு சிறுவயதிலிருந்தே சிலம்பாட்டத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்தார், அப்பா மதிவாணன் தலைமை காவலர் அம்மா துளசி மணி மேலும் இவர் பல்லடம் ஆதார் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் நிலையில் ஆகஸ்ட்,4-08-2024,அன்று பாண்டிச்சேரியில் இன்டர்நேஷனல் ஓபன் சிலம்பம் சாம்பியன்ஷிப் தற்போது சர்வதேச அளவில் பாண்டிச்சேரியில் நடைபெற்றது, சிலம்பப் போட்டியில் 12 வயது குட்பட்ட போட்டியில்,2.15, இரண்டு கால் மணி நேரம் கண்ணை கட்டி மூடிக்கொண்டு தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி உலக சாதனையில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
மதுமிதா கூறுகையில்..,
எனக்கு சிறு வயது முதலே சிலம்பாட்டத்தில் ஆர்வம் அதிகம் பல்லடம் கே. பி ஆர் அகாடமியில் சேர்ந்து வெங்கடேஷ் மாஸ்டர் ஸ்ரீதர் மாஸ்டர் அவர்கள் சிலம்ப பயிற்சி கற்றுக் கொடுத்தார்கள் மாவட்ட அளவில் 50க்கும் மேற்பட்ட பதக்கங்களை தொடர்ந்து ஐந்து முறை மாவட்ட அளவில் முதலிடம் மாநில அளவில் இரண்டு முறை முதலிடமும் வெற்றி பெற்று குளோபல் உலக சாதனை தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் சிலம்பாட்டத்தில் வெற்றி வாகை சூடுவேன் என்றும் அவர் தெரிவித்தார். இவர் பல்லடத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் சர்வதேச சிலம்பு போட்டியில் 12 வயது குட்பட்ட போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்ற இவருக்கு பல்லடம் பகுதி பொதுமக்களும், சமூகஆர்வலர்களும், பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.
