• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மாகாபா அவுட்! பிரியங்கா இன்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் மாகாபா ஆனந்த். இவர் வானவராயன் வல்லவராயன், நவரச திலகம், கடலை, அத்தி, மீசையை முறுக்கு, பஞ்சுமிட்டாய், மாணிக், இஸ்பதே ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் வெள்ளித்திரை அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை.

இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் இருந்து மாகாபா விலகி விட்டதாகவும், அவர் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்குவார் எனவும் தகவல்கள் வெளிவந்தது. ஆனால் உண்மையில், மாகாபா குடும்பத்துடன் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளதால் விஜய்டிவியிலிருந்து விடுப்பு எடுத்துள்ளதாகவும், அவர் வரும் வரையே நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்குவார் எனவும் கூறப்படுகிறது.