சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட சலவை தொழிலாளர்களின் சலவை கூட்டத்தை வெங்கடேசன் எம். எல். ஏ. பார்வையிட்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்த சலவை கூடத்திற்கு உடனடியாக கூடுதல் கட்டிடம் கட்டித் தரப்படும் என்றும் தண்ணீர் வசதிக்கு ஆழ்துளை கிணறு அமைத்து உடனடியாக சரி செய்து கொடுக்கப்படும் என்று சலவை தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்களிடமும் தலைவரிடமும் உறுதி கூறினார். இதைத் தொடர்ந்து 15 மற்றும் 16வது வார்டுகளில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, உடனடியாக சரி செய்து கொடுக்க பேரூராட்சி நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், நகரச் செயலாளர் வக்கீல் சத்யபிரகாஷ், வார்டு கவுன்சிலர்கள் குருசாமி, செல்வராணி, ஜெயராமச் சந்திரன், ஒன்றியகழக, பேரூர் கழக, மற்றும் அனைத்து நிர்வாகிகளும், மகளிர் அணி அமைப்பாளர் கலந்து கொண்டனர்.







; ?>)
; ?>)
; ?>)
