• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி அருகே டூவீலர் – லாரி விபத்தில் லாரி டிரைவர் பலி

ByP.Thangapandi

Feb 7, 2024

உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த லாரி ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குருவிளாம்பட்டி விலக்கு அருகில் கோடாங்கிநாயக்கன்பட்டியிலிருந்து உசிலம்பட்டி நோக்கி வந்த இருசக்கர வாகனம் மீது உசிலம்பட்டியிலிருந்து சிவகாசி நோக்கி சென்ற லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த கோடாங்கிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான ஜெயக்குமார் என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இருசக்கர வாகனத்தில் ஜெயக்குமாருடன் வந்த அதே ஊரைச் சேர்ந்த சுரேஷ் கண்ணன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து அறிந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் விரைந்து வந்து உயிரிழந்த ஜெயக்குமார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு., விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான பாண்டிச்சேரியைச் சேர்ந்த தனிக்காச்சலம் என்பவரை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.