தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மீது சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் 12 மாதங்களும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தை மாதத்தை முன்னிட்டு தெப்பத் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியது இந்த நிலையில் சுப்பிரமணியசாமி தெய்வானை நாள்தோறும் காலை மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

இன்று தெப்பத் திருவிழா மூன்றாவது நாளாக காலையில் சுப்ரமணிய சுவாமி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்ற பின் தங்கச் சப்ரத்தில் திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதி, கீழ ரத வீதி ,மேலரத வீதி, சன்னதி தெரு வழியாக வீதிகளில் வலம் வந்தது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.





