• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தேனி மாவட்டத்தில் ‘உங்கள் ஊரில் உங்களைத் தேடி’ நிகழ்ச்சி.., 147 கடைகளில் அதிரடி ஆய்வு…

ByJeisriRam

Aug 23, 2024

தேனி மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 147 கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தப்பட்டு, சட்ட விரோத மது, கஞ்சா, புகையிலை, கெட்டுப்போன குளிர்பானங்கள் உணவு பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு 2,15,000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, ஐந்து பேர் கைது செய்தனர்.

தேனி மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் ‘உங்கள் ஊரில் உங்களைத் தேடி’ நிகழ்ச்சியை முன்னிட்டு 147 கடைகளில் சட்ட விரோத மது, கஞ்சா, புகையிலை, கெட்டுப்போன உணவு, குளிர்பானங்கள் விற்பனையை தடுக்க அதிரடி ஆய்வு நடத்தி
2,15,000 ஆயிரம் ரூபாய் அபராத விதித்து, ஐந்து பேர் கைது செய்யப்பட்டது.

மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மூலம் சட்ட விரோத மது விற்பனை, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் கஞ்சா விற்பனை தடுக்கும் பொருட்டு, தேனி, காமராஜபுரம், கோம்பை, ஏரசை வீரபாண்டி, கள்ளிப்பட்டி, உள்ளிட்ட பல வேறு ஊர்களில் திடீர் ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டு 135 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 6 கடைகளிலிருந்து 7 கிலோ அளவிலான புகையிலை பொருட்கள் கைப்பற்றி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும் வீரபாண்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நபரிடம் 100 கிராம் கஞ்சா கைப்பற்றி கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தேனி மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் மட்டும் 147 கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தப்பட்டு மது விற்பனை, கஞ்சா, கெட்டுப்போன குளிர்பானங்கள், உணவுப் பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு 2,25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.