• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் இன்று முதல் தொழில்துறையினர் கதவடைப்பு போராட்டம்..!

Byவிஷா

Sep 26, 2023


கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தொழில்துறையினர் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் 63,000 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. குரு சிறு தொழில் நிறுவனங்களுக்கு புதிதாக விதிக்கப்பட்டுள்ள உச்சபட்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை ஒரு வருடம் காலமாக முன்வைத்து வந்தனர்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாததால் முதல் கட்டமாக கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட எல்லை பகுதியான காரணம் பேட்டையில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்பட்டது, தொடர்ந்து கதவடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் தமிழக முதல்வர் மின் கட்டணம் தொடர்பாக வெளியிட்ட செய்தியில் தொழில் அமைப்பினர் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி இன்று முதல் கதவு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அதன்படி தமிழகம் முழுவதும் 3.2 லட்சம் தொழில் நிறுவனங்களும் கோவையில் 30000 நிறுவனங்கள் உட்பட திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் 63,000 சிறு தொழில் நிறுவனங்கள் கதவு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.
தொழில்துறையினர் கதவு அடைப்பு போராட்டம் காரணமாக மாநில முழுவதும் ரூ.1.500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு மற்றும் 3 கோடி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் மின்வாரிய தலைமை பொறியாளர் ஆகியோரிடம் மனு அளித்தனர். தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.