இரணியல் ஜங்சன் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் தனியார் நடத்தும் பார் இயங்கி வந்தது. பார் செயல்படுவதை தடைசெய்ய வேண்டி மதுரை உயர் நீதிமன்றத்தில் தடை ஆணை பெறப்பட்டது. நாம் தமிழர் போராட்டத்திற்கு பின்பு மதுக்கடை பார் மூடப்பட்டது. இதனிடையே மதுக்கடையை மூட வேண்டும் என நாம் தமிழர் கட்சி கோரிக்கை வைத்தது. இது சம்பந்தமாக ஏற்கனவே 2 முறை போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் இன்று மதியம் 12 மணிக்கு நாம் தமிழர் கட்சி முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தது. இதனால் டாஸ்மாக் கடை முன்பு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். 12 மணிக்கு போலீஸ் பாதுகாப்புடன் கடை திறக்கப்பட்டது. இதனிடையே போலீசார் பாதுகாப்புக்காக இரணியல் ஜங்ஷன் பகுதியில் குவிந்தனர். அப்போது தும்பவிளை அம்மன் கோவில் சாலை வழியாக வந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் டாஸ்மாக் முன்பு குவிந்தனர்.

அப்போது அங்கிருந்த பேரிகாடை எடுத்து சாலையின் குறுக்கே போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து அப்பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். தொடர்ந்து டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது .













; ?>)
; ?>)
; ?>)