• Wed. Dec 11th, 2024

உள்ளாட்சி தேர்தல் – அதிமுக அருப்புக்கோட்டையில் பெறப்பட்ட விருப்பமனுக்கள்

Byமதி

Nov 27, 2021

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறுவதையொட்டி அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, அருப்புக்கோட்டை நகராட்சி நகர் மன்ற உறுப்பினர் பதிவிகளுக்கு போட்டியிடும் விண்ணப்பதாரர்களுக்கு விருப்பமனுவை விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்வில் அருப்புக்கோட்டை நகர கழக செயலாளர் சக்திவேல் பாண்டியன், அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் யோகவாசுதேவன், அருப்புக்கோட்டை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சங்கரலிங்கம், சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் Ex-மாவட்ட கவுன்சிலர் K.S.சண்முகக்கனி, சாத்தூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் தேவதுரை, திருச்சுழி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முத்துராமலிங்கம், திருச்சுழி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் முனியாண்டி, நரிக்குடி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் E.M.பூமிநாதன், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் முருகன், இராஜை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் மாரியப்பன், அருப்புக்கோட்டை வடக்கு ஒன்றிய அவைத் தலைவர் அசோக் வேல்சாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் என மாவட்ட, நகர, ஒன்றிய, கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.