காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் கால்நடை மற்றும் கோழிகள் எழில் கண்காட்சி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு நெடுங்காடு சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.

மேலும் கால்நடை வளர்ப்பவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இக்கண்காட்சியில் 60 கிடாரிகள், 75 கறவை பசுக்கள் 65 கோழி வகைகள் உள்ளிட்ட 4 வண்டிமாடுகள் இடம்பெற்றன. நிகழ்ச்சியில் பேசிய மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் புதுச்சேரி அரசு மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் ஆகியவர்கள் கால்நடை வளர்க்கும் உரிமையாளர்களுக்கு தங்களது கால்நடைகளை வளர்ப்பதற்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அரசு மூலம் நடத்தப்படும் இதுபோன்ற கால்நடைகளின் எழில் கண்காட்சிகள் மூலம் கால்நடைகளை உரிமையாளர்களாகிய நீங்கள் எவ்வாறு பராமரிக்கின்றீர்கள் என்று தெரிகிறது.
தங்களது பிள்ளைகளைப் போலவே கால்நடைகளை வளர்த்து ஆரோக்கியமாக வைத்திருக்கிறீர்கள் என்றும் மேலும் கால்நடை துறை சார்பில் உட்புற கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு பரிசோதனை மேற்கொள்வதற்கு நடமாடும் கால்நடை வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று நிகழ்ச்சியில் மாண்புமிகு நெடுங்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா பேசினார்கள். அதனைத் தொடர்ந்து சிறந்த கால்நடைகள் வளர்ப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.